செங்கீரை தண்டு வெண்கீரை தண்டின் மருத்துவ குணங்கள்


செங்கீரை  தண்டு   வெண்கீரை
[முளைக்கீரை]  தண்டின்  மருத்துவ  பயன்களை  பர்ப்போம்;
  1. முதலில் இதில் உள்ள சத்துகள் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்சி, கால்சியம்.
  2. இது ஆசன புற்று நோய்க்கு மிகவும் உகந்தது.  ஆசன புற்று நோய் என்பது சிறுநீர் அடிவயிற்றில் தங்கி கிருமிகளை ஏற்படுத்தி கொண்டு சிறுநீர் வராமல் எரிச்சலை உண்டு பன்னுவது.

வெண்கீரை  தண்டு  பயன்;
  • இந்த கீரை தண்டுடன் நெய், சீரகப்பொடி, உப்பு  சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • பின் இதன் நீரை  வடிகட்டி குடிப்பதினால் உள்மூலம், வெளிமூலம், நெஞ்சு எரிச்சல், மலச் சிக்கல் போன்றவை குணமாகும்.
செங்கீரை  தண்டின்  பயன்;
  • செங்கீரை தண்டுடன் நல்லெண்ணை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் அதனுடன் தண்ணீர் சேர்த்து அதில் மிளகுத்தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்
  • இதனை வடிகட்டி பருகுவதினால் மலச்சிக்கல், ஆசன புற்று நோய் குணமாகும்.
  இது  இரண்டை  வைத்து  பொடுகு  வராமல்  இருக்க  வழி;

  • இந்த கீரையை பசை போல அரைத்து அதனுடன் நல்லெண்ணை விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  • இந்த எண்ணையை தலையில் தேய்த்து 10 அல்லது 15 நிமிடம் கழித்து குளித்து வருவதினால் பொடுகு, புளுவெட்டுக்கு ஒரு நல்ல தீர்வு.
  • இது மட்டும் அல்லாமல் கூந்தல் கருமையாதல், கண் எரிச்சல், உடல் உக்ஷ்னத்தால் ஏற்படும் கைகால் மேல் எரிச்சல் கூட குணமாகும்.
Tag:healthy food for human,